Wednesday, October 3, 2012

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திரக் ஹோட்டலில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்த மாடிக்கு அனுமதியின்றி சென்ற பிரித்தானிய பெண்கள் மூவர் கைது!

Wednesday, October 03, 2012
இலங்கை::கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திரக் ஹோட்டலில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்த மாடிக்கு அனுமதியின்றி சென்றதாகக் கூறப்படும் பிரித்தானியாவைச் சேர்ந்த 3 பெண் பிரஜைகள் இன்று புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவினர் இவர்களை கைதுசெய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சுப்பர் 8 தகுதிச் சுற்றுக்களில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு மேற்கிந்திய கிரிக்கெட் அணியினர் தகுதி பெற்றுள்ளனர்...

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு பாதுகாப்புக்கென இருந்த பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவால் குறித்த யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment