Wednesday, October 3, 2012

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஐ.நா.பொதுச்செயலாளரிடம் நேரில் வழங்க தி.மு.க தலைவர் கருணாநிதி முடிவு!

Wednesday, October 03, 2012
சென்னை::டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை, ஐ.நா.பொதுச்செயலாளரிடம் நேரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில், டெசோ கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை, ஐ.நா.பொதுச்செயலாளரிடம் நேரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூனிடம், டெசோ தீர்மானத்தை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் சென்று தருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடமும், டெசோ தீர்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஸ்டாலின், டி.ஆர்.பாலு, திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.  தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ...

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, திமுக பொருளாளர் ஸ்டாலினும், எம்.பி. டி.ஆர். பாலுவும் ஐ.நா. மன்றத்துக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று டெசோ அமைப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திமுக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இணைத்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்துக்கு பதிலெழுதியுள்ள பிரதமர், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், நல்வாழ்வுக்கும் தேவையான பணிகளில் இந்திய அரசு அக்கறை காட்டி வருகிறது என்றும், ஈழத் தமிழர்களின் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கிச் செயல்படுகிறது என்றும், தெரிவித்திருக்கிறார். பிரதமரின் இக்கடிதம் தமிழக மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. பிரதமரின் இக்கடிதத்துக்கு டெசோ அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட ஐ.நா.மன்றத்தின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைத்து, ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், தங்களுடைய உரிமைகளை விவாதித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இயலும் என இக்கூட்டம் முழுமையாக நம்புகிறது. எனவே இந்தியப் பேரரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், ‘டெசோ’ உறுப்பினர்களுடன் விவாதித்து, உருவாக்கிய ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளையும், வாழ்வுரிமைகளையும் குறித்து கருணாநிதியின் கோரிக்கை மனுக்களை நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அவர்களிடமும் - ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது.
இக்கோரிக்கை மனுக்களை கருணாநிதி சார்பிலும், “டெசோ” அமைப்பின் சார்பிலும், கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் - தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஐ.நா. மன்றத்திற்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி வைத்து நேரில் வழங்கிடும் முடிவினை இன்றைய “டெசோ” கூட்டம் ஏற்றுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.....

No comments:

Post a Comment