Wednesday, October 3, 2012

இந்தியாவில் 2011ம் ஆண்டில் 1.35 லட்சம் பேர் தற்கொலை : தமிழகத்துக்கு 2ம் இடம்!

Wednesday, October 03, 2012
புதுடெல்லி :இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டில் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 963 பேர் இறந்துள்ளனர். மாநில வாரியாக பார்க்கும் போது தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை அதற்கான காரணங்கள் பற்றிய விவரங்களை அரசு தகவல் மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 16492 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 15963 பேரும், மகாராஷ்டிராவில் 15947 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.  தற்கொலை செய்து கொண்டவர்களில் 24.3 சதவீதம் பேர் குடும்ப பிரச்னை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உடல்நலக்குறைவு காரணமாக 19.6 சதவீதம் பேர் தற்கொலையில் இறங்கியுள்ளனர். ஏழ்மை காரணமாக இறந்தவர்கள் 1.7 சதவீதத்தினர் மட்டுமே. காதல் தற்கொலைகள் 3.4 சதவீதம். வரதட்சணை கொடுமை 2.4 சதவீதம். போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் 2.7 சதவீதம். திவாலானவர்கள் 2.2 சதவீதம். யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. இங்கு 1716 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 557 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment