Wednesday, October 03, 2012
இலங்கை அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுரு மற்றும் பப்புவா நியுகினாயா தீவுகளுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தலைமையில் இந்த குழு அங்கு செல்லவுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நவுரு தீவில் உள்ள அகதி முகாமில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மற்றும் ஈராக் நாடுகளை சேர்ந்த அகதிகளே இவ்வாறு மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் நவுரு தீவில் இருந்து வெளியேற்றப்பட்டு நாடுகடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment