Wednesday, October 3, 2012

இலங்கையில் இளவயதில் 6 வீதமானவர்கள் கர்ப்பம்:இணையம், கையடக்கத் தொலைபேசிகளின் முறையற்ற பாவனையால் கர்ப்பம் தரிக்கும் நிலை!

Wednesday, October 03, 2012
இலங்கை::இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் முறையற்ற பாவனையால் ஏற்படும் தொடர்புகளால் இளவயது பெண்கள் கர்ப்பம் தரிக்கும் நிலைமைகள் உருவாகியுள்ளதாக ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


கையடக்கத் தொலைபேசி மூலம் கிடைக்கப்பெறும் Missed Calls ஊடாக இனந்தெரியாத சிலரால் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் சமூக வைத்திய விசேட நிபுணர் அயேஷா லொக்கு பாலசூரிய குறிப்பிட்டார்.

இலங்கையில் இளவயதில் 6 வீதமானவர்கள் கர்ப்பம் தரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

திருமணமான ஆண்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்து இளவயது பெண்களை ஏமாற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக அயேஷா லொக்கு பாலசூரிய கூறினார்.

வெளிநாட்டு அமைப்பொன்றுடன் இணைந்து கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இளவயதினர் விரைவில் ஏமாற்றப்படுவதாக குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு, அனுராதபுரம் போன்ற இடங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment