Monday, October 29, 2012
வீஸா மோசடிகளைத் தடுக்கும் முகமாக மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையர்களுக்கு 'பயோ – விஸா' முறைமை தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மலேசியாவின் குடிவரவு திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது
உலகளாவிய ரீதியில் 'பயோ – விஸா' முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மலேசியாவில் இந்த திட்டம் எதிர்வரும் நவம்வர் மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனா, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் மியன்மார் உள்ளிட்ட நாடுகளும் இந்த 'பயோ – விஸா' முறைமைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன் கீழு; வெளிநாட்டவர்களின் கைவிரல் அடையாளம் தூதரகங்களினால் உறுதிப்படுத்தப்படும்.
அத்துடன் மலேசியாவுக்குள் பிரவேசிக்கும் போதும் அந்த கைவிரல் அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படடுள்ளது

No comments:
Post a Comment