Monday, October 29, 2012
இலங்கை::மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, துணிமணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜை ஒருவரை களுவாஞ்சிகுடி அதிரடிப்படையினர், கைதுசெய்துள்ளனர்.
50 வயதான இந்த இந்திய பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக களுவாஞ்சிக்குடி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயண அனுமதியில் இலங்கை சென்று, இந்த நபர் இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏற்கனவே இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்ட பலர், கைதுசெய்யப்பட்டு, இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர

No comments:
Post a Comment