Monday, October 29, 2012
இலங்கை::இலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அறிக்கை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு மனித உரிமைகள் சபை தயாராவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நவம்பர் முதலாம் திகதி ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத் தொடர் நான்கு தினங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சர் செயலாளர் கருணாதிலக அமுனுகம எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதன்பொருட்டு அரசாங்கத்தை பிரதிநிதிதுவப்படுத்தி மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment