Monday, October 29, 2012
இலங்கை::கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க இன்று திங்கட்கிழமை கனடாவில் இருந்தவாறு ஜெனிவா பயணமாகின்றார்.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நடைபெற்றுவருகின்ற பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே அங்கு விஜயம் செய்கின்றார்.
இந்த பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள ஏனைய பிரதிநிதிகள் இலங்கையிலிருந்தவேறே ஜெனிவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள பூகோள கால மீளாய்வு கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை நவம்பர் ஐந்தாம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.
அமர்வு நடைபெறும் காலத்தில் இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள இந்தியா ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை ஐந்தாம் திகதி முன்வைக்கவுள்ளன.
இந்த பூகோள கால மீளாய்வு மாநாட்டில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment