Thursday, October 04, 2012
இலங்கை::பங்களாதேஷ் - பெங்காய் பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த விஹாரைக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் அங்கு வாழும் பௌத்த மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டடை தொடர்பில் இன்று இலங்கையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
பின்னார் ஆர்ப்பாட்டகாரர்கள் பாதையாத்திரையாக சென்று கொழும்பு – வோட் பிரதேசத்தில் அமைந்துள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்ட மேற்கொண்டனர்.
இதனிடையே, அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று மாலை கொழும்பில் உள்ள பங்களாதேஸ் தூதுவராலயத்திறக்கு மனு ஒன்றை கையளித்தனர்.
இதன்போது சர்வ மத தலைவர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரகத்திற்கு கல்வீச்சை மேற்கொண்டனர்.
பின்னர் காவல்துறையிர் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

No comments:
Post a Comment