Friday, October 05, 2012
இலங்கை::புறச்சக்திகளினால் பிரயோகிக்கப்படும் கூடுதலான அழுத்தங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொலம்பிய பல்கலைக்கழகத்தில் ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பை வென்றதனைப் போன்றே நாட்டின் ஏனைய சவால்களுக்கும் அரசாங்கம் வெற்றிகரமாக முகம் கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அமைப்பதன் மூலம், அதனை விடவும் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
27 வீதமான சிங்கள மக்கள் வாழ்ந்து வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளதாகவும், இதன் மூலம் ஏனைய இன சமூக மக்களும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கின்றமை அம்பலமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாடும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தனித்துவமான அணுகுமுறைகளை பின்பற்றும் எனவும், அதே நிலமையே இலங்கையிலும் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ள வகையில் அமையப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் n;தாடர்பில் அமைச்சர் பீரிஸ், விளக்கமளித்துள்ளார்.

No comments:
Post a Comment