Friday, October 05, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தலைமையில் ஏற்படுத்தப்பட உள்ள எதிர்க்கட்சிகளின் அரசியல் கூட்டணி இந்த மாதம் 18 ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில், முதல் முறையாக மக்கள் முன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கரு ஜயசூரியவின் பிரதான பங்களிப்பு ஏற்படுத்தப்பட உள்ள இந்த கூட்டணியில் தயாசிறி ஜயசேகர, பாலித ரங்கே பண்டார, மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய ஆகியோர் கலந்துகொள்ள் உள்ளதுடன், தம்பர அமில தேரரின் ஆசியும் இந்த கூட்டணிக்கு கிடைத்துள்ளதாக சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பிக்கு தனியான அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளது. அவர்கள் இந்த கூட்டணியில் இணைய இணக்கம் தெரிவிக்கவில்லை. முன்னிலை சோசலிச கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் சஜித் பிரேமதாச இந்த கூட்டணிக்கு ஆதரவு வழங்க இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை.
இது அரசியல்p கூடட்ணி அல்ல, அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் என்ற வகையில் இவர்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவு வழங்கவில்லை. அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இது தேசிய நடவடிக்கை என்பதுடன் காலத்தின் தேவையாகும். இதனை அடிப்படையாக கொண்டு மேற்படி அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது. ஜனாதிபதி ஆட்சி முறையில் இரந்து நாட்டை மீட்க வேண்டும் என்பதை தொனிப்பொருளாக கொண்டு, நாங்கள் 18 ஆம் திகதி ஹைட்பார்க்கில் கூட உள்ளோம். இதில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் எனவும் சரத் பொன்சேக்கா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment