Friday, October 5, 2012

திவிநெகும சட்டமூலத்திற்கு வடமாகாணத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் அரசியல் அமைப்புக்கு அமைவாக செயற்படும்கெஹெலிய ரம்புக்வெல்ல!

Friday, October 05, 2012
இலங்கை::திவிநெகும சட்டமூலத்திற்கு வடமாகாணத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் அரசியல் அமைப்புக்கு அமைவாக செயற்படும் என அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளரும் ஊடகததுறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மாகாண சபை ஒன்று இயங்காத சந்தர்ப்பத்தில் சில நடவடிக்கைகளை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனால் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அமைவாக அரசாங்கம் செயற்படுமேயன்றி, அதற்கு விரோதமாக செயற்படாது.

வடமாகாணத்தில் மாகாண சபை இயங்கவில்லை என்பதால், முழு நாட்டிலும் செயற்படுத்த வேண்டிய வேலைத்திட்டத்தை நிறுத்த முடியாது எனவும் ரம்புக்வெல்ல கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

திவிநெகும சட்டமூலத்திற்கு மாகாண சபைகளில் எதிர்ப்பு இல்லை என்பதை காட்டுமாறு உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது. இதனடிப்படையில் 8 மாகாணங்களில் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment