Thursday, October 04, 2012
இலங்கை::மன்னார் நீதிமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 43 சந்தேக நபர்களும் இன்று மன்னார் மஜிஸ்த்திரேட் நீதமன்றில் மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மன்னார் நீதி மன்றத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரஸ்தாப நபர்களுக்கு மனிதாபிமான அடிப்டையில் பிணை வழங்குமாறும், தாக்குதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தொடர்பு இல்லை என்பதாலும்,அவர்களது குடும்ப நிலை குறித்து கவனம் செலுத்துமாறும் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி அநுர மெதகொட தலைமையிலானவர்கள் கோரிக்கை முன் வைத்தனர்.
மஜிஸ்திரேட் நீதி மன்றத்துக்கு பிணை வழங்கும் அதிகாரம் இருப்பதாகவும் சட்டத்தரணி அநுர மெதகொட நீண்ட விவாதமொன்றை முன் வைத்தார்.
இருந்த போதும்,நீத மன்ற கட்டிடத்துக்கான சேதம் தமது மன்றின் பிணை வழங்கலுக்கு உகந்ததாக இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதவான்,மேல் நீதிமன்றில் பிணை மனு கோறி ஏற்கனவே ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாலும்,அதனையும் மீறி தமக்கு பிணை வழங்கும் சட்டங்கள் இல்லையென்றும் தெரிவித்து மேலும் 14 நாட்களுக்கு சந்தேக நபர்களை விள்க்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் ஒருவர் சாட்சிகளினால் அடையாளப்படுத்தப்பட்டதாக ஏற்கனவே மன்றில் இரகசிய பொலிஸார் தெரிவித்த போதும்,பின்னர் அது அவர் இல்லையென்று விசாரணையின் போது சாட்சி தெரிவித்ததாக இரகசிய பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
இதே வேளை இந்த தாக்குதல் தொடர்பில் தொடர்புகள் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பிணைமனு கோரி மன்னார் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ் தியாகேந்திரனினால் விசாரணைக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட

No comments:
Post a Comment