Thursday, October 04, 2012
இலங்கை::களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று புதன்கிழமை அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.
பழுகாமம், விஸ்ணு கோவில் வீதியில் உள்ள வீட்டில் பிஸ்டல் மற்றும் கத்திகளுடன் புகுந்த சுமார் நான்கு பேர், வீட்டில் இருந்தவர்களின் கைகளைக் கட்டிவிட்டு, இந்த துணிகர கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டில் இருந்த சுமார் 13 1/2 (பதின்மூன்றரை) பவுண் தங்க நகைகள் கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அண்மைக்காலமாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வது தொடர்பில் மக்கள் தமது கவலையை தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment