Thursday, October 04, 2012
இலங்கை::கொழும்பு காலிமுகத்திடலில் இராணுவத்தினருக்கு சொந்தமான பகுதியை 140 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுக்கென ஐடிசி இந்திய நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இது குறித்து இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கு சொந்தமான பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ள ஐடிசி இந்திய நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஹோட்டல் துறை நிறுவனமாகும்.
இந்நிறுவனம் இலங்கையில் அதிசொகுசு ஹோட்டல், உயர்வசதி வீட்டுத்தொகுதி மற்றும் பெறுமதிமிக்க வர்த்தகத் தொகுதி என்பவற்றை அமைக்கவுள்ளது.

No comments:
Post a Comment