Saturday, October 27, 2012
லண்டன்::பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா மீண்டும் நாடு திரும்புவாள் என்று அவளது தந்தை திட்டவட்டமாக கூறினார். பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பவள் மலாலா (14). தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில், பெண்கள் பள்ளிக்கு செல்ல கூடாது, பொது இடங்களுக்கு ஆண்கள் துணை இல்லாமல் செல்ல கூடாது, உடல் முழுக்க மறைக்கும் உடை அணிய வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகளை விதித்தனர். இதை எதிர்த்து தனது 11வது வயதில் இன்டர்நெட்டில் பல கட்டுரைகளை மலாலா எழுதினாள். பிபிசியிலும் உரை நிகழ்த்தினாள்.
இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த 9ம் தேதி மலாலா மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தற்போது சிறுமிக்கு இங்கிலாந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்திய 2 தீவிரவாதிகளில் ஒருவர் அட்டாவுல்லா. இவரை 2009ம் ஆண்டே பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால், பின்னாளில் விடுவிக்கப்பட்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியானது. இதற்கிடையில் இங்கிலாந்தில் உள்ள குயின் எலிசபெத் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலாலா, அபாய கட்டத்தை தாண்டி விட்டாள். சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மலாலாவின் தந்தை ஜியாவுதீன் மற்றும் குடும்பத்தார் நேற்றுமுன்தினம் பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து வந்தனர். மருத்துவமனையில் மலாலாவை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டனர்.
மலாலாவின் உயிருக்கு தலிபான் தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால், சிகிச்சை முடிந்து நாடு திரும்புவாளா அல்லது வேறு நாட்டில் தஞ்சம் அடைவாளா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜியாவுதீன், மலாலாவை கொல்ல போவதாக தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதை பற்றி கவலைப்படவில்லை. பாகிஸ்தானுக்கு திரும்பாமல் வேறு நாட்டில் மலாலா தஞ்சம் அடைவாளா என்ற கேள்வியை கேட்டு சிரிப்புதான் வந்தது. தீவிரவாதத்தால் எவ்வளவோ இழந்து விட்டோம். கேவலமான நோக்கத்துக்காக நாங்களோ என் மகள் மலாலாவோ தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை. தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் என் மகள் மலாலா, மீண்டும் பாகிஸ்தானுக்கு வருவாள் என்று திட்டவட்டமாக கூறினார். பேட்டியின் போது உடனிருந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், மலாலா நாடு திரும்பினால் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

No comments:
Post a Comment