Saturday, October 27, 2012

பசில் ராஜபக்ஷவும் கோத்தபாய ராஜபக்ஷவுமே அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் - ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க!

Saturday, October 27, 2012
இலங்கை::அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருக்க முடியாது என்றால் முதலில், வெளியேற வேண்டியவர்கள், 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுமே என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நீக்க அரசாங்கத்திற்கு எந்த தேவையும் இல்லை எனவும் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருக்க முடியாதவர்கள் இரந்த அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற சந்தர்ப்பம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டாறு கூறியுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவே தற்போது அரசாங்கத்திற்கு ஆட்சி அதிகாரம் கிடைத்ததே அன்றி, வாசு, திலான் போன்றவர்களுக்காக அல்ல என தெரிவித்துள்ள வர்ணசிங்க, இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டியவர்கள், 2010 ஆம் ஆண்டு மக்கள் ஆணையின் மூலம் கரையேறிய இடதுசாரிகள் எனவும்  தமது கட்சி இருப்பது நாட்டு மக்களுடனேயேயன்றி அரசாங்கத்துடன் அல்ல எனவும் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment