Saturday, October 27, 2012
செலாயாங்::26 அக்டோபர்- பத்துமலை அருகே 29 மாடி கட்டிடம் நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை காலை முதல் பத்துமலைத் திருத்தலத்தில் எதிர்ப்பு பேரணி நடைபெறத்து
இன்று காலை 10.15 மணி வரையில் அங்கு சுமார் நூற்றுக்கணக்கான பேர் திரண்டிருந்தவேளையில் நேரம் ஆக, ஆக மேலும் அதிகமான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைதிப் பேரணியை பத்துமலை ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்துமலைக்கு அருகில் 29 மாடி குடியிருப்பு கட்டுவதற்கான திட்டம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் வீடமைப்பு மேம்பாட்டாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தால் பத்துமலைக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சப்படுவதால், மக்கள், எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி அமைதிப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:
Post a Comment