Saturday, October 27, 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 14 பேர் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைப்பு - பிரிஷாந்த ஜயகொடி!

Saturday, October 27, 2012
இலங்கை::அவுஸ்திரேலியா சென்று திருப்பி அனுப்பப்பட்ட 14  இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். 
இவர்கள் குடாவெல்ல கடற்பரப்பில் கடத்தப்பட்ட படகின் மூலம் அவுஸ்திரேலியா சென்றிருந்தனர்.

இந்த குழுவினர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த குழுவினர் கொகொஸ் தீவிற்கு அருகில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர்.
படகிலிருந்த 14  பேர் விமானத்தின் மூலம் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, இவர்களில் ஒருவர் நாட்டிற்கு இன்று அனுப்பிவைக்கப்படவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் சில தினங்களில் அவரை நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் அகதிகள் தொடர்பான அமைச்சர் கிரிஸ் போவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment