Saturday, October 27, 2012
சென்னை::இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில்; இடம்பெற்ற போதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29-ம் திகதி ஆரம்பமாகவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30-ம் திகதி நடைபெறும் சட்டமன்ற வைர விழா தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் பற்றி விவாதிக்கப்படும் போது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலையை இந்திய மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment