Friday, October 5, 2012

மாவை சேனாதிராஜாவின் மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற நடவடிக்கை!

Friday, October 05, 2012
இலங்கை::திவிநெகும சட்டமூலத்தை வட மாகாண சபைக்காக அங்கீகரித்து வட மாகாண ஆளுனர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவை, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி இந்த மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, அரசியலமைப்பு அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளதாக, இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தெரிவித்தமையினால் நீதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதற்கமைய, இரு தரப்பினரும் முன்வைத்த கேள்விகளையும், நீதிபதியின் கேள்விகளையும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இரு தரப்பிற்கும் அறிவித்தது.

No comments:

Post a Comment