Friday, October 5, 2012

எதிர்வரும் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை!

Friday, October 05, 2012
இலங்கை::எதிர்வரும் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


நாடு முழுவதிலும் உள்ள விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளும், வசதிகளும் வடக்கு கிழக்கு விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இளம் தலைமுறையின் வளர்ச்சியில் இலத்திரனியல் ஊடகங்களுக்கு மிக முக்கியமான பங்கிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்கால சந்ததியினரை நலனைக் கருத்திற் கொண்டு ஊடக நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment