Wednesday, October 3, 2012

யாழ் மாவட்டத்தில் மீள் குடியேறிய முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைக் கண்டறியும் மீள்ளாய்வுக் கூட்டம்-டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது!

Wednesday, October 03, 2012
இலங்கை::யாழ் மாவட்டத்தில் மீள் குடியேறிய முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைக் கண்டறியும் மீள்ளாய்வுக் கூட்டம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியக் கல்லூரியில் மேற்படி விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம்  இடம்பெற்றது.

இதன்போது, 1990ம் ஆண்டு குடாநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் 2002ம் ஆண்டு ஏ – 9 பாதை திறக்கப்பட்டபோது சுயவிருப்பின் பேரில் ஒரு தொகுதி முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்ந்ததுடன் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களது மீள் குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் யாழ் மாவட்டம் முழுமையிலும் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிவரும் இடர்பாடுகள், பிரச்சினைகளைக் கண்டறியும் முகமாக இன்றையதினம் மேற்படி கலந்துரையாடல் யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதன்போது மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், அத்தியாவசிய தேவைகள், மின்சாரம், வீட்டுத்திட்டம், கல்வி, சுகாதாரம், காணிகளின் உரிமம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பில் தமது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவை தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் பிரச்சினைகளுக்கு துறைசார்ந்தவர்கள+டாக உரிய வகையில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கியதுடன் பாதிப்புக்குள்ளாகின்ற மக்களுக்காகவே நாம் ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றோம், யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது அதற்கு எதிராக நாம் குரல் கொடுத்ததுடன், தொடர்ந்தும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றோம் என்றும் மாதமொரு தடவையாவது முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய உள்ளதாகவும் தொவித்தார்.

இதனிடையே சமூகத்தின் மேம்பாட்டிற்காக எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதன்போது யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட துறைசார்ந்த அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் பங்கெடுத்தனர்.

No comments:

Post a Comment