Thursday, October 4, 2012

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது!

Thursday, October 04, 2012
இலங்கை::சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலிய செல்ல முற்பட்ட ஆறு பேர் நீர் கொழும்பு – எத்துகால பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுடன், அகதிகள் சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலிய செல்வதற்கு உதவி புரிந்து, மானிப்பாய், சாவகச்சேரி, நீர் கொழும்பு போன்ற பகுதிகளை சேர்ந்த நான்கு பேரும் கைது செய்யப்படனர்.
அவர்கள் அனைவரும் தற்போது நீர்கொழும்பு காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
நீர் கொழும்பு காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment