Thursday, October 4, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான இந்திய விஜயத்தின் ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக,,செய்திகள் வெளியாகியுள்ளன!

Thursday, October 04, 2012
சென்னை;;தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான இந்திய விஜயத்தின் ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக,  செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 10ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்யும் எனவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுகள் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பலரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்தகால தடங்களை அடிப்படையாக கொண்டு, அரசாங்கத்தின் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் யோசனையும் காலத்தை கடத்தும் செயல் என்று தெரிவித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை புறக்கணித்து வருகிறது.
எனினும் இனப்பிரச்சினை தீர்வின் பொருட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என்று இந்தியா வலியுறத்தம் என்று இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

No comments:

Post a Comment