Thursday, October 4, 2012

நிவ்யோர்க்கில் ஜீ.எல்.பீரிஸ், சிங்கப்பூரின் வெளியுறவுகள் துறை அமைச்சர் கே.சண்முகத்தை சந்தித்துள்ளார்!

Thursday, October 04, 2012
நிவ்யோர்க்::நிவ்யோர்க்கில் உள்ள வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சிங்கப்பூரின் வெளியுறவுகள் துறை அமைச்சர் கே.சண்முகத்தை சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது இலங்கை மற்றும் சிங்கபூருக்கு இடையிலான தொழில்நுட்ப வளங்களின் பகிர்வு தொடர்பில் பேசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களின் மீளமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.`

No comments:

Post a Comment