Thursday, October 4, 2012

இரண்டு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற ஒருவரையேனும் தெரிவுசெய்ய முடியவில்லை - மல்காந்தி விக்ரமசிங்க!

Thursday, October 04, 2012
இலங்கை::மொழி அத்தியட்சகர்களை சேர்த்துக்கொள்வதற்கான தேர்வுகள் நடைபெற்ற போதிலும் அதற்குத் தகுதியானவர்களை சேர்த்துக்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் இரண்டு மொழிகளிலாவது தேர்ச்சிப் பெற்ற ஒருவரையேனும் தெரிவுசெய்ய முடியாமற்போயுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்த தேர்விற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

மொழி அத்தியட்சகர்கள் அரச மொழிகள் திணைக்களத்திற்கு சேர்த்துக்கொள்ளும்போது தற்போது அரச சேவையில் அவர்கள் வகிக்கின்ற பதவியை உயர்த்தி சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மொழி பெயர்ப்பாளர்களின் கடமைகளை மேற்பார்வை செய்து உறுதிப்படுத்த வேண்டியது மொழி அத்தியட்சகர்களின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment