Thursday, October 04, 2012
நௌரு தீவுக்கு செல்ல விரும்பாத இலங்கைய அகதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப விருப்பம் வெளியிட்டு வருகின்றமையானது, அவர்கள் நேர்மையான அகதிகள் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் இலங்கையர்கள், அந்த நாட்டு அரசாங்கத்தின் பசுபிக் திட்டத்தின் கீழ், நௌரு மற்றும் பப்புவா நியுகினியா போன்ற தீவுகளுக்கு மாற்றப்படுகின்றனர்.
எனினும் அங்கு செல்ல விரும்பாத 40க்கும் அதிகமான இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் அச்சுறுத்தல் இருப்பதாக கூறிக் கொண்டு அவுஸ்திரேலியா வந்த அவர்களால், எவ்வாறு அச்சம் இன்றி மீண்டும் இலங்கைக்கு செல்ல முடிகிறது என்று அந்த ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதில் இருந்து அவர்கள் நேர்மையான அகதிகள் இல்லை என்றும், பொருளாதார தேவைக்காகவே அவர்கள் அவுஸ்திரேலியா வந்துள்ளமையும் உறுதியாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மனித உரிமைகள் நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் தமிழ் ஒன்றியங்கள் போன்றவை முன்வைத்த அழுத்தங்கள் பொய்யானது என்றும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

No comments:
Post a Comment