Thursday, October 04, 2012
மீனம்பாக்கம்::சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்க பிஸ்கட்களை ஏர்போர்ட்டில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் தஸ்தகீர் (26). சுற்றுலா பயணியாக, சிங்கப்பூருக்கு சென்று விட்டு கொழும்பு வழியாக இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை நிறுத்தி சோதனையிட்டனர். சிங்கப்பூரில் இருந்து நேரிடையாக சென்னைக்கு வரலாம் எதற்காக கொழும்பு சென்று வருகிறீர்கள் என்று அதிகாரிகள் விசாரித்தனர். அதற்கு அவர் சரியான பதிலை கூறவில்லை. இதையடுத்து அவர் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டனர். அதற்குள் கருப்பு பேப்பரில் சுற்றப்பட்டிருந்த ஒரு பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, 5 தங்க பிஸ்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எடை 417 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.13 லட்சம். இதையடுத்து அவரை கைது செய்து தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments:
Post a Comment