Thursday, October 04, 2012
சென்னை::தமிழக அணைகளில் நீர் இருப்பு, பயிர்களின் நிலை குறித்து கோட்டையில் தமிழக தலைமை செயலருடன் இன்று காலை மத்திய நீர்வளத் துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால், தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்தனர். இதனால் காவிரி ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் காவிரி ஆணைய கூட்டம் நடந்தது. அப்போது, தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி பிரதமர் உத்தரவிட்டார். அதை ஏற்க கர்நாடக அரசு மறுத்ததால், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
கர்நாடக அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் உத்தரவை அமல்படுத்த கூறியது. அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதை எதிர்த்து கர்நாடக மாநில விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றன. மண்டியா மாவட்டத்தில், தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய நீர்வளத் துறை செயலர் துருவ் விஜய் சிங் காலை 9.50 மணிக்கு விமானத்தில் சென்னை வந்தார். அவரை சூழ்ந்து கொண்டு நிருபர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு, Ôதலைமை செயலரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் நிருபர்களை சந்திக்கிறேன்Õ என்று கூறிவிட்டு சென்றார். பின்னர் தலைமை செயலகம் சென்று தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கியுடன் துருவ் விஜய் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பொதுப்பணி துறை செயலர் சாய்நாத்தும் கலந்து கொண்டார். கர்நாடக அரசு குறைவாகவே தண்ணீர் திறந்து விடுகிறது. தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நீர்வளத் துறை செயலரிடம் சாரங்கி விரிவாக எடுத்துரைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, துருவ் விஜய் சிங் நாளை கர்நாடகா சென்று அந்த மாநில தலைமை செயலருடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின் தனது அறிக்கையை காவிரி ஆணையத்திடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 8ம் தேதி டெல்லியில் நடக்க இருந்த காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. நீர்வளத் துறை செயலரின் அறிக்கை கிடைத்த பின், கண்காணிப்பு குழு கூட்டம் 15ம் தேதிக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment