Thursday, October 04, 2012
இலங்கை::இராணுவத்தினருக்கு தேவையான சீருடைத் துணிகளை கொள்வனவு செய்வதற்காக 2 பில்லியன் ரூபாவுக்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அமைச்சரவையி;ல் முன்வைத்த தீர்மானத்தையடுத்து இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
முப்படையினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய மாணவர் படையணி ஆகியோருக்கு சீருடைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இராணுவத்தினருக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட 10 மாடி வைத்தியசாலையொன்றை அமைப்பதற்காக 4000 மில்லியன் ரூபாவுக்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளதாகவும்; அமைச்சர் கூறினார்.
படையினருக்கும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவது அரசாங்கத்தின் கடமையெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment