Thursday, October 04, 2012
இலங்கை::காலத்திக்கேற்ப வகையிலும், நவீன உலகை எதிர்கொள்ளக் கூடிய வகையிலும் தொழில்நுட்பக் கட்டமைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முதன்மை அப்பிள் மீள் விற்பனை நிலையத்தை (FUTUREWORLD Authorised Reseller) இன்றைய தினம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நவீன உலகை எதிர்கொள்ளக் கூடிய வகையில் தொழில்நுட்ப கட்டமைப்புக்கள் முன்னெடுக்கப்படவேண்டும். அதற்குரிய மின்னியல் இயந்திரசாதனங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இந்நிலையம் செயற்படவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
அந்தவகையில் நவீன உலகை நோக்கியதான பல்வேறு செயற்றிட்டங்களை யாழ்.மாவட்டத்தில் நாம் ஏற்கனவே முன்னெடுத்து வரும் நிலையில் இவ்விற்பனை நிலையத்தின் பங்கும் பேருதவியாக அமையும் என்றும் தெரிவித்தார்.
FUTUREWORLD Authorised Reseller இன் தேசிய இணைப்பாளர் மனிஷ் பற்றிக்காரா உரையாற்றும் போது, இந்நிலையத்தினூடாக நவீன உலகை நோக்கியதான இலக்கை நோக்கி முழுமையான சேவையை வழங்க தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
முன்பதாக மங்கள வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் புதிய மீள் விற்பனை நிலையத்தை நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து விற்பனைக் கூடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் விற்பனை நடவடிக்கைகளையும் சம்பிரதாயப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டிருக்கும் குறித்த நிறுவனத்தின் கிளைகள் ஏற்கனவே இலங்கையில் கண்டி, கொழும்பு 05, மற்றும் 07 ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நிலையில் இன்றையதினம் ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணத்தில் அதன் 04வது கிளையைத் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment