Sunday, October 28, 2012

போலியான ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி நிவ்யோர்க்கில் உள்ள வங்கி ஒன்றில் பணம் பெற்ற இரண்டு இலங்கையர்கள் கைது!

Sunday, October 28, 2012
நிவ்யோர்க்::போலியான ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி நிவ்யோர்க்கில் உள்ள வங்கி ஒன்றில் பணம் பெற்ற இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் கனடாவின் குடியுரிமை கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு அவர்கள் நிவ்யோர்க்கில் உள்ள வங்கி ஒன்றில் இவ்வாறு தொடர்சியாக பணம் பெற்றுக் கொண்டிருந்தமையை கண்ணுற்ற காவற்துறை அதிகாரி ஒருவர், அவர்களை கைது செய்துள்ளார்.

அவர்களிடம் இருந்து 58 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டுள்ளன.

கனடா ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் தன்னியக்க அட்டை கருவி மையத்துக்கு சென்று அங்கு பல தன்னியக்க அட்டைகளை பயன்படுத்தி பணத்தை பெற்றுள்ளனர்.


இதன்போது அவர்கள் இருவரிடமும் 257 போலி தன்னியக்க கடன் அட்டைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பல காலங்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று நம்பப்படும் இவர்கள் 28 வயதான சிவரூபன் ஞானபண்டிதன், 24 வயதான ராகவன் பத்மசேனன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment