Sunday, October 28, 2012
இலங்கை::புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து விசாரணை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லயன் எயார் பயணிகள் விமானமொன்றை புலிகள் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பூணகரி பிரதேச கடலிலிருந்து மீட்கப்பட்டு, புதைக்கப்பட்டது.
இவ்வாறு புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து மீளவும் விசாரணை நடாத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விரைவில் இந்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment