Saturday, October 27, 2012

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று இலங்கைக்கு செல்ல முயன்ற பயணியின் பாஸ்போர்ட் பறிமுதல்!

Saturday, October 27, 2012
மதுரை::மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று இலங்கைக்கு செல்ல முயன்ற பயணியின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் சேகர்,40. பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தின் கேண்டீனில் வேலை செய்தார். தற்போது வேலை இழந்த இவர், இலங்கையில் வேலைக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக, நேற்று மதியம் மதுரையில் இருந்து விமானத்தில் செல்ல தயாரானார். "இமிகிரேஷன்' அதிகாரிகள் விசாரணையில், ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவர், வெளிநாடு செல்வோரை பாதுகாக்கும் அதிகாரியின் சான்று இல்லாத பாஸ்போர்ட்டில் செல்ல முயன்றது தெரிந்தது. இதைதொடர்ந்து, அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு,

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. ஏற்கனவே, செப்.,21ல், நெல்லை பயணி ஒருவரின் பாஸ்போர்ட், இதே தவறுக்காக பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment