Thursday, October 04, 2012
மண்டபம்::ராமநாதபரம் மாவட்டம் மண்டபம் சீனியப்பா தர்ஹா என்ற பகுதியிலிருந்து 2004ல் தங்கராஜ், 52 மற்றொரு மீனவருடன் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச்சென்றார். போதைப்பொருள் வைத்திருந்ததாக தங்கராஜை நடுக்கடலில், இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதி உத்தரவையடுத்து, தங்கராஜ் கொழும்பு வெளிக்கடை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
எட்டு ஆண்டுகளுக்குப்பின் கடந்த மாதம் 23ம் தேதி தங்கராஜ் ஜெயிலில் மாரடைப்பால் இறந்தார். அவரது உடல், இலங்கையிலிருந்து விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டு, இன்று சீனியப்பா தர்ஹாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

No comments:
Post a Comment