Thursday, October 04, 2012
சென்னை::இலங்கை விவகாரத்தில், என்னைப் போல பிரதமர் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில், "டெசோ' (தமிழ் ஈழ (புலி) ஆதரவாளர்கள் அமைப்பு) உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்ட முடிவில், கருணாநிதி அளித்த பேட்டி:
தமிழர்களைக் (புலிகளை) கொன்று குவித்த, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை பிரதமர் வரவேற்று, விருந்து அளித்துள்ளார். ஒரு நாட்டின் அதிபர் என்ற முறையில், மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், இலங்கையிலிருந்து, இந்திய அமைதிப் படை நாடு திரும்பிய போது, அதை வரவேற்க வேண்டும் என, முதல்வராக இருந்த என்னை, கவர்னர் கேட்டுக் கொண்டார். ஆனால், "தமிழர்களைக் (புலிகளை) கொன்று குவித்த அமைதிப் படையை வரவேற்க முடியாது' எனக் கூறிவிட்டேன். இதுபோல, எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது.இலங்கையில் நடக்கும் தமிழர்கள் மறுவாழ்வுப் பணிகள் திருப்தி அளிப்பதாக இல்லை. போர் முடிந்தும், எதிர்பார்த்த அமைதி ஏற்படவில்லை. முள்வேலி முகாம் கொடுமைகள் நின்றபாடில்லை. முள்வேலிக்கு வெளியேயும் கொடுமைகள் தொடர்கின்றன.
தமிழர்களை நிம்மதியாக வாழ விடுவர் என்ற நம்பிக்கை இல்லை. இந்தத் தகவல்களை யெல்லாம் தொகுத்து, டெசோ மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களையும் இணைத்து, ஐ.நா., சபையிலும், ஐ.நா., சபையின் மனித உரிமை ஆணையத்திடமும், ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் கொடுக்க உள்ளனர்.ஐ.நா., சபைக்கு, தி.மு.க., பிரதிநிதிகள் செல்வதற்கான, அரசியல் ரீதியான அனுமதியை, மத்திய அரசு அளித்துவிட்டது. எந்த தேதியில், ஐ.நா., சபை பொதுச்செயலரைச் சந்திப்பது என்பதற்கு, ஐ.நா., சபையின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம்.
டெசோ கூட்டத்தில், தமிழர்கள் பாதுகாப்பு, வாழ்வுரிமை குறித்து, ஐ.நா., தீர்மானத்தை மத்திய அரசு முன்மொழிவதன் மூலம், இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.அ.தி.மு.க., அரசைக் கண்டித்து, தி.மு.க., அறிவித்துள்ள மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு, போலீஸ் அனுமதியைக் கேட்டுள்ளோம்; அனுமதி தருவர் என, நம்புகிறோம்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
இலங்கை விவகாரத்தில் என்னைப்போல பிரதமர் நடந்து கொள்வாரா? எதிர்பார்க்க முடியாது என்கிறார் (புலி ஆதரவாளி) கருணாநிதி!
முதல்ல தமிழ்நாட்டு மக்களை ஏமாத்துனீங்க. அப்புறமா இலங்கை தமிழர்கள், இப்போ ஐநா வா? என்ன development ? ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு ஐநா.,வுக்கே அல்வா-வா.


No comments:
Post a Comment