Thursday, October 4, 2012

ஒரே மேடையில் ஒபாமா, மிட் ரோம்னி விவாதம்!

Thursday, October 04, 2012
வாஷிங்டன்::அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளர், ஒபாமாவும், குடியரசு கட்சி வேட்பாளர், மிட் ரோம்னியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில், மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவரும் பல்வேறு மாகாணங்களில், சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். அதிபர் ஒபாமாவுக்கு, வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒரே மேடையில் விவாதிப்பது, 1960ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. மூன்று முறை, இவர்கள் பல்வேறு இடங்களில் ஒரே மேடையில் விவாதித்து, மக்களிடம் ஓட்டு கேட்பர். இந்த முறையில் நேற்று, டென்வர் நகரில் இருவரும் பிரசாரம் செய்தனர். ஒரே மேடையில் தோன்றிய ஒபாமாவும், மிட் ரோம்னியும் பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு கொள்கைகள் குறித்து தங்கள் நிலையை விளக்கினர். இரண்டாவது கட்ட விவாதம், நியூயார்க்கில், வரும் 16ம்தேதி நடக்கிறது. மூன்றாவது சுற்று விவாதம், புளோரிடாவில், 22ம்தேதி நடக்கிறது. இந்த விவாதங்கள், பல்வேறு, "டிவி' சேனல்களில், நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment