உலக இதய தினத்தை முன்னிட்டு இலங்கை இதய சங்கமும் ஜனாதிபதி செயலகமும் ஒன்றிணைந்து காலி முகத்திடலில் இன்று நடத்திய பாதயாத்திரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்துகொண்டனர்.
அலரி மாளிகையிலும் இது தொடர்பில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இவற்றிலும் ஜனாதிபதி பங்குபற்றினார்.
ஆண்டு தோறும் செப்டம்பர் 29 ஆம் திகதி உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. மாரடைப்பு காரணமாக உலகம் முழுவதும் 17.3 மில்லியன் மக்கள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 20ஆம் நூற்றாண்டில் இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10சதவிகிதமாக இருந்தது. 21ம் நூற்றாண்டில் 35 சதவிகிதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருகிறார்கள் அத்துடன் இவ் மாரடைப்பின் காரணமாக அதிகமாக பெண்களே இறப்பதாக தெரியவருகின்றது.
உலக இதய நாளின் முக்கிய குறிக்கோள் மாரடைப்பு வரும் முன் காப்பதும்- வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான்




No comments:
Post a Comment