Monday, October 01, 2012
இலங்கை::சில முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் மோசடி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவிக் காலத்தில் சட்ட விரோதமான முறையில் சில முக்கிய அமைச்சர்கள் தங்களது சொத்துக்களை அதிகரித்துக் கொண்டுள்ளதாகக் அரச உயர்மட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.
ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் குறித்த அமைச்சர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்து விபரங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக 250க்கும் மேற்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment