Tuesday, October 2, 2012

கடாபியை சுட்டுக் கொன்றது யார்? புதிய தகவல்!!

Tuesday, October 02, 2012
லண்டன்::லிபியாவின் அதிபர் கடாபியை பிரான்ஸ் நாட்டு உளவுத்துறை அதிகாரி சுட்டுக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. லிபியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்திய மும்மர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்க கடாபி ராணுவத்தை வைத்து அடக்க முயன்றார். இது உள்நாட்டு போராக மாறியது. கடாபி எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்க கூட்டுப்படை ஆதரவாக செயல்பட்டது. கடாபி அரண்மனை மீது அமெரிக்க விமானங்கள் குண்டுவீசி தாக்கின. இதில் படுகாயத்துடன் தப்பிச்சென்ற கடாபி அவரது சொந்த நகராந சர்தி நகருக்கு சென்று ஒரு சாக்கடை குழாயில் ஒளிந்துகொண்டார். இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு உளவுப்பிரிவை சேர்ந்த ஒருவர் தெரிந்து பிரான்ஸ் நாட்டு அதிபர் சர்கோஜிக்கு தெரிவித்தார். கடாபியை சுட்டுக்கொலை செய்யும்படி உளவு பிரிவை சேர்ந்த அவருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடாபி நோக்கி அந்த உளவு பிரிவை சேர்ந்தவர் இயந்திர துப்பாக்கியால் சுட்டார். இதில் கடாபியின் தலையில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி நடந்தது என்று டெய்லி மெயில் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment