Tuesday, October 02, 2012
இலங்கை::நிட்டம்புவ மற்றும் பசியால ஆகிய பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த இரு இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து 1 கிலோ 66 கிராம் மற்றும் ஒரு கிலோ 06 கிராம் கஞ்சாவுடன் இரு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் றுவன்வெல்ல மற்றும் ஹங்குராகெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, பசியால சந்தியில் 478 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நிட்டம்புவ நகரில் 300 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:
Post a Comment