Tuesday, October 02, 2012
ராமநாதபுரம்::இலங்கையில் தேடப்படும் கடத்தல் குற்றவாளிகள், வழக்கிற்கு பயந்து, தப்பி வந்து தமிழகத்தில் பதுங்கி உள்ளதாக, கியூ பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் இருந்து, நேற்று முன்தினம், கள்ளப் படகில், ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வந்திறங்கிய அனோஜ், 22, என்பவரிடம், கியூ பிரிவு போலீசார் விசாரித்தனர். இவர், இலங்கை, நுவரலியா மாவட்டம், குச்சல்லாவை சேர்ந்தவர். இவரும், கொழும்பு ரிஷிவி என்பவரும், தைவான் உட்பட சில நாடுகளுக்கு, வாசனை திரவியம் பெயரில், போதைப் பொருட்கள் கடத்தினர். இலங்கை போலீசார், ரிஷிவியை கைது செய்தபின், அனோஜை, தேடிவந்தனர். அனோஜ், படகோட்டிகளிடம், 40 ஆயிரம் கொடுத்து, தனுஷ்கோடிக்கு தப்பி வந்தார் என, தெரியவந்தது.
சமீப காலமாக, இலங்கையில் கடத்தல் தொழிலில் ஈடுபடும் சிலர், அங்குள்ள போலீசுக்கு பயந்து, தமிழகத்தில் பதுங்கி விடுகின்றனர். பின் போலீசில் சிக்கி, சிறையில் அடைக்கப்படுகின்றனர். சில காலத்திற்கு பின் வெளியே வந்து, ஏதாவது ஒரு அகதிகள் முகாம் அல்லது வெளிப்பதிவில் தங்கி, மீண்டும் கடத்தலில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர். இவர்களை, கியூ பிரிவு போலீசார், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment