Saturday, October 27, 2012

வடக்கு கிழக்கு மக்களுக்கான இராணுவத்தினரின் உதவிகள்!

Saturday, October 27, 2012
இலங்கை::இலங்கை இராணுவத்தினரால் கல்வித்தரத்தை உயர்த்தும் திட்டத்திற்கமைய வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள் இந்த வருடமும் இடம் பெற்றுவருகின்றன. இதன் மேலும் ஒரு அங்கமாக புதுக்குடியிருப்பு மாணவர்களுககாக கருத்தரங்குகள் இடம் பெற்றன.

கருத்தரங்குகள்யாவும் உயர் தகைமை பெற்ற அனுபவம் வாய்ந்த விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியர்களைக் கொண்டு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்டதுடன் இரணப்பாலை மகாவித்தியாலயம், சுதந்திரபுரம் வித்தியாலயம், துனுவில் வித்தியாலயம், உடயர்காட்டுக்குளம் வித்தியாலயம், தேவிபுரம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இக்கருத்தரங்கில் கலந்து பயன் பெற்றனர்.

இக்கருத்தரங்கின் போது மாணவர்களுக்கான கற்றல் பொதிகளும் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பரந்தன் மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் முகமாக பயிற்சிப்பட்டறை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப் பயிற்சிப்பட்டறையில் பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் 1-13 ஆம் ஆண்டு வரையான மாணவர்கள் பங்குபற்றினர். விரிவுரைகள்யாவும் “பெண்டியம் 2000 நிறுவனத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் கலைத்திரன்களை வளர்துக் கொள்ளவென தேவையான உபகரணங்களும் மானவர்களின் நலன்கருதி அந்நிறுவனத்தால் வழங்கப்பட்டன.

மேலும் திப்படுவெவ ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள அமைப்புடன் இணைந்து இலங்கை இராணுவத்தினர் இகளிபோகஸ்வெவ, மஹாகட்சிக்குடிய, பிரப்பன்மடுவ மற்றும் கொக்கெளிய கிராமங்களில் புதிதாக மீள் குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கினர்.

இதற்கான நிகழ்வுகள்யாவும் கெலாகஸ்போவெவ நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இதன் போது அப்பியாசப் புத்தகங்கள், உலர் உணவுகள், இரவு விளக்குகள், தைத்த ஆடைகள், பாதணிகள், மூக்குக் கண்ணாடிகள் மற்றும் மேலும் பல பாவனைப் பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மன்னார் பிரதேச நன்னாத்தன் மற்றும் முருங்கன் பிரதேச மக்களுக்கும் மன்னார் படைத்தள தலைமையகத்தின் ஏற்பாட்டுல் தேவையான உதவிகள் வழங்கப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தின் விவசாய ஊக்குவிப்புக்கான ஏற்பாடுகளும் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

No comments:

Post a Comment