Saturday, October 27, 2012

அ.‌தி.மு.க.வு‌க்கு தா‌வுகிறா‌ர்க‌ள் தே.மு.‌தி.க. எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள்?:ஜெயலலிதாவுடன் மேலும் 2 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு: அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு

Saturday, October 27, 2012
சென்னை::முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை நேற்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன் இருவரும் திடீரென சந்தித்து பேசினார்கள். தங்கள் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்படி அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தனர். அவர்கள் தொகுதியில் உள்ள குறைகளை கண்டிப்பாக நிறைவேற்றி தருவதாக முதல் - அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சுந்தர்ராஜன், தமிழழகன் இருவரும் "அ.தி.மு.க. அரசு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருப்போம்'' என்றனர். அவர்களது நடவடிக்கை தே.மு.தி.க. தொண்டர்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தே.மு. தி.க.வை மேலும் அதிர்ச்சி ஆழத்தில் தள்ளும் வகையில் ராதாபுரம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், பேராவூரணி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. நடிகர் அருண்பாண்டியன் இருவரும் இன்று (சனிக்கிழமை) பகல் 10.45 மணிக்கு கோட்டைக்கு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் இருவரும் தங்கள் தொகுதியில் உள்ள நீண்ட நாள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்படி கூறி மனு கொடுத்தனர். அவர்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிவுடன் கேட்டார்.

ராதாபுரம், பேராவூரணி தொகுதிகளில் உள்ள முக்கிய திட்டங்களை நிறைவேற்றி தருவதாக கூறினார். இதற்கு மைக்கேல் ராயப்பனும், அருண்பாண்டியனும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அ.தி.மு.க. திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றனர்.

தமிழக சட்டசபையில் தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் தேர்வாகி இருந்தனர். அவர்களில் 4 எம்.எல்.ஏ.க் கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளனர். இதன் காரணமாக தே.மு.தி.க. பலம் 29-ல் இருந்து 25 ஆக சரிந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ள இந்த சரிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மேலும் சிலர் அ.தி.மு.க. ஆதரவு நிலையை எடுப்பார்கள் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் 3 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. ஆதரவாளர்களாக மாறினால், எதிர்க்கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க. இழக்கும். தற்போது சட்டசபையில் தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் 3 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிலையை மாற்றம் பட்சத்தில் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வாய்ப்பு கிடைக்கும்.

No comments:

Post a Comment