Saturday, October 27, 2012

த‌‌மிழக‌த்தை இரு‌ண்ட நாடாக ஆ‌கிய ஜெயல‌லிதாவு‌க்கு எ‌ந்த தகு‌தியு‌ம் இ‌ல்லை - கருணா‌நி‌தி கோப‌ம்!

Saturday, October 27, 2012
சென்னை::மின்சாரத்தை பற்றி பேசுவதற்கோ, அறிக்கை விடுவதற்கோ, இன்றைக்கு தமிழ்நாட்டையே இருண்ட நாடாக ஆக்கியிருக்கின்ற முதல்வ‌ர் ஜெயலலிதாவுக்கு எந்த தகுதியும் இல்லை எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணாநிதி கா‌ட்டமாக கூ‌றினா‌ர்.

சென்னையில் செ‌‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ரிட‌ம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

தமிழகத்திலே உள்ள மின்சார பற்றாக்குறைக்கெல்லாம் கடந்த கால அரசு தான் காரணம் என்றும், அப்போது மின் உற்பத்திக்காக தொடர் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

மின்சாரத்தை பற்றி பேசுவதற்கோ, அறிக்கை விடுவதற்கோ - இன்றைக்கு தமிழ்நாட்டையே இருண்ட நாடாக ஆக்கியிருக்கின்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்த தகுதியும் இல்லை.

தொழில்நுட்ப ரீதியாக மத்திய அரசிடமிருந்தும், மற்ற மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை கொண்டு வருவதற்கான வழி வகை களை உங்கள் காலத்தில் காணவில்லை என்றும், தி.மு.க.வும் காங்கிரசும் இதில் எந்த விதமான அக்கறையும் காட்டவில்லை என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

இப்போது ஆட்சியில் அவர் தானே இருக்கிறார். அவர் முதலில் அக்கறை காட்டட்டும். இவர்கள் செய்கிற தவறுக்கு மத்திய அரசு மீதும், தி.மு. கழக அரசு மீதும் குறை கூறி, தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறார்கள்.

தி.மு.க.வை பொறுத்தவரை மின்சாரம் கோரி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பீர்களா?

ஆட்சி பொறுப்பிலே இருப்பவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விட வேண்டுமென்று முதல்வர் கேட்டுக்கொண்டு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் எழுதினால், எல்லோருமே அந்த வேண்டுகோளை தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசுக்கு விடுப்பார்கள்.

மின் தட்டுப்பாட்டை தீர்க்க எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள ஜெயலலிதா நினைக்கவும் இல்லை. செயல்படுத்தக்கூடிய திறமை உடையவர்கள் யார் என்பதில் அக்கறை காட்டவும் இல்லை எ‌ன்று கருணாநிதி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

No comments:

Post a Comment