Saturday, October 27, 2012

13 ஆவது திருத்தச் சட்ட தீர்வை இழுத் தடிப்பது அரசே ஒழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல - தர்மலிங்கம் சித்தார்த்தன்!

Saturday, October 27, 2012
இலங்கை::13 ஆவது திருத்தச் சட்டத்தையே இல்லாதொழிக்குமாறு கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நியாயமான தீர்வு கிடைப்பதனை ஜனாதிபதி உறுதிப்படுத்தாத நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தெரிவுக்குழுவில் இணையமுடியும் எனவும் தீர்வை இழுத் தடிப்பது அரசே ஒழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல எனவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காமல் காலம் கடத்து செயற்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே பொறுப்பு.

13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்று அரசில் அங்கம் வகிக்கும் கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இந்தக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் நிலையில் நியாயமான தீர்வு எவ்வாறு கிடைக்கும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியாயமான தீர்வு திட்வை எட்டுவதை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. இவ்வாறானதொரு நிலைமையில் தெரிவுக்குழுவில் எவ்வாறு இணையமுடியும்.
வெளிச்சமுகத்தினால் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாக நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசு, எவ்வாறு நான் முன்வைக்கும் தீர்வில் தமிழர் நலன் சார்விடயங்களை முன்வைக்கும் எனவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment