Saturday, October 27, 2012

இலங்கை நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 14 புகலிடக் கோரிக்கையாளர்கள்!

Saturday, October 27, 2012
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மீனவ படகொன்று கடத்தி அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த குழுவினர் கொகொஸ் தீவிற்கு அருகில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
படகிலிருந்த 14  பேர் விமானத்தின் மூலம் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மீனவ படகுகளில் 15 பேர் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் ஒருவர் நாட்டிற்கு இன்று அனுப்பிவைக்கப்படவில்லை எனவும் எதிர்வரும் சில தினங்களில் அவரை நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியா குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் அகதிகள் தொடர்பான அமைச்சர் கிரிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment