Monday, October 01, 2012
தேன்கனிக்கோட்டை::கிருஷ்ணகிரி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவத்தில் ரிக்வண்டி உரிமையாளர் மற்றும் அஜாக்கிரதையாக இருந்த சிறுவனின் தந்தை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட் டம் தளியை அடுத்த கும்பளத்தூரை சேர்ந்தவர் ஆனந்த் (35). விவசாயி. இவரது மனைவி பத்மா (25). இவர்களது மகள் பூஜா (4), மகன் குணா (3). ஆனந்த் தன்னுடைய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தார். தளி அருகே உள்ள நேத்தப்பா என்பவருக்கு சொந்தமான ரிக் வண்டி மூலம் ஆறரை இஞ்ச் போர் அமைக்கப்பட்டது. அங்கு 520 அடி ஆழத்திற்கு போர் போட்டும் அங்கும் தண்ணீர் வராததால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஆனந்த் மனைவி, குழந்தைகளுடன் தோட்டத்துக்கு சென்றார். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது மூடாமல் இருந்த 520 அடி ஆழ போர்வெல்லில் குணா தவறி விழுந்தான். தகவலறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். ஆழ்துளை கிணற்றில் கயிறு விட்டு பார்த்த போது உள்ளே சிறுவன் 20 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரிந்தது. உடனே 2 பொக்லைன் மூலம் போர்வெல்லுக்கு அருகே பள்ளம் தோண்டப்பட்டது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
பின்னர் அவனை ஒசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இன்று 2வது நாளாக அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போர்வெல்லை மூடாமல் சென்ற ரிக்வண்டி உரிமையாளர் நேத்தப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர். மேலும், வருவாய்த்துறையினரிடம் முறையாக அனுமதி வாங்காதது மற்றும் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக சிறுவனின் தந்தை ஆனந்த் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment